அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
Published on

ஜோலார்பேட்டை

வாணியம்பாடி நடுப்பட்டறை பகுதியை சேர்ந்தவர் திராவிடமணி (வயது 63). இவர் நாட்டறம்பள்ளியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஜீவா நகர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மேதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில் திராவிடமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிய வாகனம் எது என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com