குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்ததாக கூறி மூதாட்டி கொலை - அக்கா, தங்கை கைது

பில்லி சூனியம் வைத்ததாக கூறி, மூதாட்டியை கொலை செய்த அக்கா மற்றும் தங்கையை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்ததாக கூறி மூதாட்டி கொலை - அக்கா, தங்கை கைது
Published on

தேனி,

தேனி மாவட்டம் வருசநாடு அருகே, தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஜக்கம்மாள் என்ற மூதாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மூதாட்டியின் அக்கா மகள்களான அய்யம்மாள் மற்றும் நாகராணி ஆகிய இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மூதாட்டி ஜக்கம்மாள் தங்கள் குடும்பத்திற்கு பில்லி சூனியம் வைத்ததாகவும், அதனால் தங்கள் குடும்பத்தினருக்கு உடல்நலக் குறைவு மற்றும் கஷ்டங்கள் ஏற்பட்டு, தங்கள் பெற்றோர் உயிரிழந்ததாகவும் அய்யம்மாள் மற்றும் நாகராணி நம்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சகோதரிகள் இருவரும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ஜக்கம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com