நாங்குநேரியில் பெரும்பத்து கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு

பெரும்பத்து கிராமத்தில் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.
நாங்குநேரியில் பெரும்பத்து கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு
Published on

நாங்குநேரி,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் முழுவதும் 1,680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவையனைத்திலும் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290-வது வாக்குச்சாவடியில் 969 வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்போட செல்லாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4 மணி நேரமாகியும் மக்கள் வாக்களிக்க செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த மார்ச் 2-ம் தேதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் நீதி கிடைக்கவில்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com