வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி: தமிழக அரசு தகவல்


வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி: தமிழக அரசு தகவல்
x

280 வாக்குச் சாவடி நிலை முகவர்கள் 2 நாள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றனர்.

சென்னை ,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

முதன்முறையாக, அரசியல் கட்சிகளின் பங்கேற்பை வலுப்படுத்த, வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு (BLA) இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி அளிக்கிறது.

பீகாரைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளின் 280 வாக்குச் சாவடி நிலை முகவர்கள் 2 நாள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பீகாரில் நடைபெறவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, இந்திய தேர்தல் ஆணையம் (ECI), பீகாரைச் சேர்ந்த வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு (BLA) பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளின் 280 வாக்குச் சாவடி நிலை முகவர்கள், டெல்லியில் உள்ள மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனத்தில் (IIIDEM) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2 நாள் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் முதன்முறையாக நடத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற வாக்குச் சாவடி நிலை முகவர்களிடம் உரையாற்றினர். இந்தப் பயிற்சி திட்டமானது மார்ச் 4, 2025 அன்று நடைபெற்ற தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கான (CEO) மாநாட்டின் போது கருத்தாக்கம் செய்யப்பட்டது. தேர்தல் செயல்முறைகளில் வாக்குச் சாவடி நிலை முகவர்களின் முக்கியத்துவத்தை ஆணையம் எடுத்துரைத்தது மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் 1951, வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தும் விதிகள் 1961 மற்றும் அவ்வப்போது ஆணையத்தால் வெளியிடப்பட்ட கையேடுகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தப் பயிற்சித் திட்டம் அவர்களின் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற உதவும் என்று வலியுறுத்தியது.

சட்ட விதிகளின்படி அவர்களின் நியமனம் மற்றும் கடமைகள் பற்றிய தகவல்கள் வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்சித் திட்டமானது வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல், புதுப்பித்தல், திருத்துதல் மற்றும் தொடர்புடைய படிவங்கள் உள்ளிட்ட தேர்தல் செயல்முறைகளின் பல்வேறு அம்சங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்களில் பிழையிருப்பின், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950 இன் பிரிவுகள் 24(a) மற்றும் 24(b) இன் கீழ் முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீடுகள் செய்வது குறித்தும் வாக்குச் சாவடி நிலை முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story