நிர்வாகிகள் தேர்வு

கடையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
நிர்வாகிகள் தேர்வு
Published on

கடையம்:

கடையம் அருகிலுள்ள ரவணசமுத்திரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி நிர்வாகிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி முகமது அலி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ரவண சமுத்திரம் பிரைமரி தலைவராக முஹம்மது இக்பால், செயலாளராக சாகுல் ஹமீது காசியார், பொருளாளராக பீர் முகம்மது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவர்களாக ஜாவித் இக்பால், முகமது ஹசன் என்ற ஹாஜி, ஏ.ஜே.முகமது இஸ்மாயில் ஆகியோரும், துணை செயலாளர்களாக  முஹம்மது இஸ்மாயில், யாகூப் அலி, செய்யது நாகூர் ஹாஜி ஆகியோரும், கவரவ ஆலோசகர்களாக ஜெய்லானி பக்கீர் மைதீன் காசியார், முகமது கமாலுதீன், அகமது கபீர் ரிபாய், முகமது முனீப், முகமது முஸ்தபா, மாவட்ட பிரதிநிதிகளாக முகமது ஹுசைன், சபுரா பேகம், பீரப்பா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com