கள்ளக்குறிச்சி அருகே டிராக்டர் உரசியதில் மின்கம்பங்கள் சேதம்

குறுகலான சாலையில் சென்ற டிராக்டர் அங்கிருந்த மின்கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
டிராக்டர் உரசி மின்கம்பம் சேதம்
Published on: 

கள்ளக்குறிச்சி,

கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் உரசியதில் மின்கம்பங்கள் சேதமடைந்தன.

மின்கம்பம் சேதம்

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூரில் இன்று, விதிகளை மீறி அதிக அளவில் கரும்பை ஏற்றிக் கொண்டு டிராக்டர் குறுகலான சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் உரசியதில் 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தன.

இது குறித்து தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com