சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரெயில் சேவை ரத்து

இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரெயில் சேவை ரத்து
Published on

சென்னை,

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 03.08.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை மின்சார ரெயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று முதல் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

* இன்று முதல் 14-ந்தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்படும். காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரை ரெயில் சேவை இருக்கும். பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 1.42 மணி வரை ரெயில் சேவை இருக்கும்.

* இன்று முதல் 14-ந்தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பல்லாவரம்-கூடுவாஞ்சேரி இடையே ரெயில் சேவை ரத்துசெய்யப்படுகிறது.

* இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை செங்கல்பட்டிலிருந்து காலை 7.45, 8.05, 8.50 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அரக்கோணத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் விரைவு மின்சார ரெயிலும், அதற்கு மாற்றாக தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

* இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 8.26, 8.39 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மகளிர் சிறப்பு மின்சார ரெயில், அதற்கு மாற்றாக அனைவரும் பயணிக்கும் மின்சார ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com