சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி இடையிலான மின்சார ரெயில்கள் நாளை ரத்து

கோப்புப்படம்
சென்னை சென்டிரல்-கும்மிடிப்பூண்டி இடையிலான மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மீஞ்சூர்-அத்திபட்டு ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 11.25 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரைலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






