மின் ஒயர் திருட்டு

ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மின் ஒயர் திருட்டு போனது.
மின் ஒயர் திருட்டு
Published on

அரியலூர் வாலாஜா நகரம், மின் நகர் பகுதியில் வசித்து வருபவர் மகாராஜா, விவசாயி. இவர் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாய பயன்பாட்டுக்காக 90 மீட்டர் மின் ஒயரை வாங்கி வைத்து இருந்தார். இதனை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் குறித்து மகாராஜா அளித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com