

சீர்காழி;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட துறையூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகில் சாலையோரம் உள்ள ஒரு தென்னை மரத்தில் மின் கம்பி உரசியபடி செல்கிறது. மேலும் காற்று பலமாக வீசும் போது மின் கம்பி கீழே அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பியை அகற்றி புதிய மின் கம்பி அமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.