குளியலறையில் விழுந்து எலக்ட்ரீசியன் சாவு

கம்பத்தில் குளியலறையில் விழுந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
குளியலறையில் விழுந்து எலக்ட்ரீசியன் சாவு
Published on

கம்பம் வரதராஜபுரம் ஐஸ்கடை சந்து தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஜெயராமன் (வயது 30). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 30-ந்தேதி வீட்டில் உள்ள குளியலறையில் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com