மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
Published on

மின்சாரம் பாய்ந்து சாவு

பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சபரீசன் (வயது 35). எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சபரீசன் கடந்த 22-ந்தேதி மாலை தனது வீட்டில் மின் இணைப்பு சம்பந்தமான வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சபரீசன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட சபரீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சபரீசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் சபரீசன் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com