மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பலியாகினார்.
மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பலி
Published on

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டி அருகே உள்ள அய்யாபட்டியை சேர்ந்தவர் அழகு. இவருடைய மகன் சுரேஷ் (வயது 45). எலக்ட்ரீசியன். இவர் நேற்று கொட்டாம்பட்டியை அடுத்துள்ள குன்னங்குடிபட்டியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் மின்சாரம் தடைபட்டதை தொடர்ந்து சரிசெய்ய அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறினார். அப்போது மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பார்மரில் தொங்கியபடியே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com