நெல்லை தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் மாதத்திற்கான மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.
நெல்லை தென்காசியில் இன்று முதல் மின்வாரிய குறைதீர்க்கும் கூட்டம்: மேற்பார்வை பொறியாளர் தகவல்
Published on

திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் இன்று முதல் காலை 11 மணியளவில் பின்வருமாறு ஜூன் மாதத்திற்கான மின்சார வாரியம் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

அதன்படி இன்று (3.6.2025) முதலாவது செவ்வாய்கிழமை வள்ளியூர் கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 6.6.2025 முதலாவது வெள்ளிக்கிழமை சங்கரன்கோவில் கேட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 10.6.2025 இரண்டாவது செவ்வாய்கிழமை தென்காசி கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 13.6.2025 இரண்டாவது வெள்ளிக்கிழமை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 17.6.2025 மூன்றாவது செவ்வாய்கிழமை கடையநல்லூர் கேட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20.6.2025 மூன்றாவது வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 24.6.2025 நான்காவது வெள்ளிக்கிழமை கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலக செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின்வாரிய குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com