இமானுவேல் சேகரன் நினைவு நாள்

ஆழ்வார்திருநகரியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
இமானுவேல் சேகரன் நினைவு நாள்
Published on

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளருமான சண்முகநாதன், தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியன் அரசு, அ.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வார்திருநகரி அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com