தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

பர்கூர் அருகே கடன் தொல்லையால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

பர்கூர் தாலுகா அஞ்சூர் அருகே உள்ள கொள்ளூரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த அவர் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில் அருகில் கடந்த 3-ந் தேதி இரவு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சின்னசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com