அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Published on

சென்னை,

சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருவல்லிகேணியில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் சிவாஜி நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டிலும், சீலப்பாடியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏவுமான செந்தில்குமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகார்கள் சோதனை நடந்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில், காவலர்கள் அங்கு சோதனை செய்ய அனுமதி மறுப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனிடையே திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள இல்லத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com