மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் சாவு

மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் உயிரிழந்தார்.
மின்சாரம் பாய்ந்து என்ஜினீயர் சாவு
Published on

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் ராஜதுரை. என்ஜினீயரான இவர் காரைக்குறிச்சி கிராமத்தில் அரவை மில் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அரவை மில்லில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்வதற்காக அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரத்தை நிறுத்திவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். அவர் சென்று நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் அரவை மில்லுக்கு வராததை கண்டு அவரை தேடி அவரது உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது மின்மாற்றியின் அருகில் மின்சாரம் தாக்கிய நிலையில் ராஜதுரை மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்ட உறவினர்கள் தா.பழூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com