பொறியியல் சேர்க்கை- ரேங்க் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,31,436 மாணவர்களுக்கும்தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கை- ரேங்க் பட்டியல் வெளியீடு
Published on

சென்னை,

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சென்னையில் ரேங்க் பட்டியலை வெளியிட்டார். பொறியியல் ரேங்க் பட்டியலில் சஸ்மிதா என்ற மாணவி முதலிடம் பிடித்தார்.

நவநீத கிருஷ்ணன் என்ற மாணவர் 2-வது இடமும், காவ்யா என்ற மாணவி 3-வது இடமும் பெற்றுள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877- இடங்கள் உள்ளன.

முதலிடம் பிடித்த மாணவி சஸ்மிதா கட் ஆஃப் - 199.67 கட் ஆஃப் மதிப்பெண்களில் முதல் 10 இடங்கள் பெற்றவர்களின் பட்டியலை வாசிக்கிறார். http://tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண்கள் அறியலாம்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com