என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 27-ந்தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 27-ந்தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 27-ந்தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு
Published on

சென்னை,

என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.

ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில், முதலில் கலந்தாய்வுக்கான கட்டணம் செலுத்தி, அதன் பின்னர், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கும், தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் அவகாசம் வழங்கப்படும்.

அந்தவகையில், மாணவர்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் எந்தெந்த மாணவர்கள்? எந்தெந்த தேதியில்? ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்த அட்டவணையும், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு ஏதுவாக கடந்த கல்வியாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளின் திறன் அறிக்கையும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, 4 சுற்றுகளாக பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கல்லூரிகளின் திறன் அறிக்கையில், கடந்த 2020-ம் ஆண்டில் ஏப்ரல், மே மாதம் செமஸ்டர் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும், நவம்பர், டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும் அதன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த பட்டியலில் ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வில் 30 கல்லூரிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று இருக்கின்றன. அதேபோல், நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் 2 கல்லூரிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இதுதவிர, நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் 3 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத தகவலும் அதில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com