என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை

வடக்கன்குளம் அருகே என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
Published on

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் அருகே பழவூர் லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் வினு ராகேஷ் (வயது 24). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய தலையில் புற்றுநோய் இருந்தது. இதையடுத்து அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

தலையில் ஏற்பட்ட வலியால் வேதனை அடைந்த வினு ராகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பழவூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com