நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது: முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

தேசிய பொறியாளர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்தியப் பொறியியலின் தந்தை என்று அழைக்கப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பொறியாளர் தின'மாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தேசிய பொறியாளர் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் நாளாகக் கொண்டாடும் இந்நாளில், தேசத்தின் உள்கட்டமைப்பை நாளும் செதுக்கிவரும் பொறியியல் வல்லுநர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமையின் துணையுடன் நவீன இந்தியாவைக் கட்டமைப்பதில் பொறியாளர்களின் பங்கு மகத்தானது. சாலைகள், பாலங்கள், அணைகள், விண்வெளி ஆய்வுகள், டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் என நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் நமது பொறியாளர்களின் திறனும், உழைப்பும் மிளிர்கின்றன.

பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான, முன்னேற்றம் மிக்க நாட்டினை உருவாக்கத் தொடர்ந்து துணை நிற்கட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com