எண்ணூர் வாயு கசிவு விவகாரம்: உரத் தொழிற்சாலையில் வல்லுநர் குழு ஆய்வு

வல்லுநர் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
எண்ணூர் வாயு கசிவு விவகாரம்: உரத் தொழிற்சாலையில் வல்லுநர் குழு ஆய்வு
Published on

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து வல்லுநர் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வரை தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பான முதற்கட்ட அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முழு அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட ஆலையில் வல்லுநர் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே ஆலையை மீண்டும் திறக்க அரசிடம் அனுமதி பெறப்பட்டதாக வெளியான தகவலை மறுத்துள்ள ஆலை நிர்வாகத்தினர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி ஆய்வு நடைமுறையை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com