திமுக ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும்: அண்ணாமலை

ஒவ்வொரு ரேஷன் அட்டையின் மீதும், ஒரு நாளைக்கு ரூ.150 கடன் சுமையை ஏற்றியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுக ஆண்டதும் போதும் மக்கள் மாண்டதும் போதும்: அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஐந்து ஆண்டு கால ஆட்சியில் முதல் 28 மாதங்கள் மகளிர் உரிமை தொகை வழங்காமல் ஏமாற்றிய திமுக அரசு, அதன் பிறகு வழங்கிய தொகையை கணக்கெடுத்தால், ஒரு நாளைக்கு ரூ.20 மட்டுமே வழங்கியிருக்கிறது. ஆனால், ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு ரேஷன் அட்டையின் மீதும், ஒரு நாளைக்கு ரூ.150 கடன் சுமையை ஏற்றியிருக்கிறது.

பொதுமக்கள் கையில் ரூ.20 கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும், ரூ.150 ஏமாற்றியிருக்கிறது திமுக. எங்கே சென்றது இந்த பணம் எல்லாம்?

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com