குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்

சின்னசேலத்தில் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்
Published on

சின்னசேலம், 

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சின்னசேலம் வட்டாரத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 265 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் விழா சின்னசேலத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை வழங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்புமணி மாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா வரவேற்றார். இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் சாந்தி பஞ்சவர்ணம், லட்சுமி வெள்ளையம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com