இபிஎஸ் ரொம்ப டென்ஷன் ஆகுறாரு... உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
இபிஎஸ் ரொம்ப டென்ஷன் ஆகுறாரு... உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
Published on

சென்னை மண்ணடியில் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கின்ற அடிமை கூட்டம் மோடியுடன் உள்ளது. முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் கேள்வி பட்டு இருப்பீங்க.. முரட்டு அடிமை கேள்வி பட்டு இருக்கிறீர்களா? இதை சொன்னதுக்குதான் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வந்துவிட்டது. என்ன சொல்கிறார் தெரியுமா என்னை பார்த்து..உதயநிதி எப்பவோ செத்து போயிருக்கனும்.. உயிரோடு இருந்து என் உயிரை வாங்குறான்னு சொல்லிட்டாரு..

ரொம்ப டென்ஷன் ஆகுறாரு..யோசிச்சு பாருங்க.. உதயநிதிக்கு அனுபவம் இல்லை என்று எடப்பாடி சொல்கிறார். எனக்கு அனுபவம் கிடையாதுதான். எந்த அனுபவம் தெரியுமா? இந்த அனுபவம் (எடப்பாடி சசிகலா காலில் விழும் புகைப்படத்தை எடுத்து காட்டினார்) எனக்கு கிடையாது. பதவிக்காக யாருடைய காலில் விழும் அனுபவம் எனக்கு கிடையாது. இதைத்தான் சொன்னேன். ஆனால், எடப்பாடி ரொம்ப கோபித்துக்கொண்டார். கொஞ்ச நாளில் கெட்டவார்த்தை எல்லாம் கூட பயன்படுத்துவார்னு நினைக்கிறேன். தயாராக இருப்போம்..பார்த்துக்கலாம்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com