ஈபிஎஸ் வழிபாடு - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மின்தடை

மக்களால் நிம்மதியா வாழவும் முடியல.. நிம்மதியா இறைவனை தரிசிக்கவும் முடியல என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மின்தடை
Published on: 

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கோவில் உள்ளே சென்று தரிசிக்கச் சென்ற போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திடீர் மின்தடை ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தற்போது மீனாட்சி அம்மன் கோவில் மின்தடை ஏற்பட்டிருப்பது பக்தர்களை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. மின்வெட்டு பிரச்சனையை சீக்கிரமாக அரசு சரி செய்ய வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற நிலையில், கோயில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 10 நிமிடங்களுக்கும் மேல் மின்வெட்டு நீடித்துள்ளது. இதனால் பக்தர்கள் சிறிது நேரம் அவதி அடைந்தனர்.

10 நிமிடங்கள் மட்டுமே மின்தடை ஏற்பட்ட நிலையில், உடனடியாக ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நீடித்த மின் தடை பிறகு சரிசெய்யப்பட்டது.

சாமி தரிசனம் செய்த பின் வெளியே வந்தே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,

மக்களால் நிம்மதியா வாழவும் முடியல.. நிம்மதியா இறைவனை தரிசிக்கவும் முடியல என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

X