கருமந்துறை பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு-போலீசார் நடவடிக்கை

கருமந்துறை பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறலை அழித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருமந்துறை பகுதியில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு-போலீசார் நடவடிக்கை
Published on

பெத்தநாயக்கன்பாளையம்:

சேலம் மாவட்டம் பெரியகல்வராயன் மலை, சடையம்பட்டி மலை கிராம பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் 3 பிரிவுகளாக பிரிந்து சோதனை நடத்தினர். அப்போது சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் வைக்கப்பட்டு இருந்த 1000 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. போலீசாரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com