எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் நிரந்தர ரெயிலாக மாற்றம்

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் நிரந்தர ரெயிலாக மாற்றம்
Published on

சென்னை,

தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக வேளாங்கண்ணி வரை இருமார்க்கங்களிலும் வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் (வண்டி எண் 06061/06062) தற்போது நிரந்தர ரெயிலாக இயக்கப்பட உள்ளது. அதாவது எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரெயில் வருகிற 18-ந்தேதியில் இருந்தும், வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரெயில் வருகிற 19-ந்தேதியில் இருந்தும் நிரந்தர ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

அதாவது இந்த ரெயில் (வண்டி எண் 16363) புதன்கிழமைதோறும் எர்ணாகுளத்தில் இருந்து நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 5.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரெயில் (வண்டி எண் 16364) வியாழக்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 11.35 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.

இந்த ரெயில் கோட்டயம், செங்கனசேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம், கருங்காப்பள்ளி, சாஸ்தன்கோட்டை, கொல்லம், குந்தரா, அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலில் பொதுப்பெட்டிகள்-4, 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள்-8, 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள்-3, ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com