ஈரோடு: மதுகுடிக்க பணம் தர மறுத்தவரின் மண்டையை உடைத்த வாலிபர்...!

ஈரோடு அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்தவரின் மண்டையை வாலிபர் உடைத்த உள்ளார்.
ஈரோடு: மதுகுடிக்க பணம் தர மறுத்தவரின் மண்டையை உடைத்த வாலிபர்...!
Published on

ஈரோடு,

ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் முகமது சேட் (வயது 65). இவர் தனது நண்பர் முகமது ரபீக்குடன் சூளை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டு இருந்த ஈரோடு பாரதி நகரை சேர்ந்த டேவிட் குமார் (28) மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர், முகமது சேட்டுவிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் கொடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த டேவிட் குமார், ராமச்சந்திரன் ஆகியோர் பீர் பாட்டிலால், முகமது சேட்டுவின் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் தடுக்க வந்த முகமது ரபீக்கையும் அவர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். காயம் அடைந்த முகமது சேட் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட் குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ராமச்சந்திரனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com