ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் - கி.வீரமணி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என கி.வீரமணி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் - கி.வீரமணி
Published on

ஈரோட்டு,

ஈரோட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனையையாக இருக்கும். திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக்கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com