ஈரோடு: வானத்தில் பயங்கர வெடிச்சத்தம்: வட்ட வடிவில் புகைமூட்டம் - பொதுமக்கள் பீதி

சிவகிரி பகுதியில் வானத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஈரோடு: வானத்தில் பயங்கர வெடிச்சத்தம்: வட்ட வடிவில் புகைமூட்டம் - பொதுமக்கள் பீதி
Published on

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான அஞ்சூர், கந்தசாமிபாளையம், விளக்கேத்தி, மோளவிநாயகன்புதூர், நல்லசெல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு வானத்தில் விமானம் வெடித்து சிதறுவது போல் பயங்கர வெடி சத்தம் கேட்டது.

இதனால் வீடுகளின் மேற்கூரைகளில் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் அப்பகுதியில் வானத்தில் மிகப்பெரிய வட்ட வடிவில் புகைமூட்டம் காணப்பட்டது. அதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அந்த பகுதியில் ஜெட் விமானம் ஏதேனும் பறந்திருக்கலாம் எனவும் இதனாலேயே பயங்கர வெடிச் சத்தம் போன்று கேட்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com