எட்டயபுரம் நடுவிற்பட்டியில் வழிவிடும் விநாயகர் கோவில் வருசாபிஷேகம்

எட்டயபுரம் நடுவிற்பட்டியில் வழிவிடும் விநாயகர் கோவில் வருசாபிஷேகம் நடந்தது.
எட்டயபுரம் நடுவிற்பட்டியில் வழிவிடும் விநாயகர் கோவில் வருசாபிஷேகம்
Published on

எட்டயபுரம்:

எட்டயபுரம் நடுவிற்பட்டி முச்சந்தியில் அமைந்துள்ள வழிவிடும் விநாயகர் கோவில் 7-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று காலை 10.30 மணியில் இருந்து 12. 30 மணிக்குள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலையில் மகா கணபதி பூஜை, அணுக்கை, மகா சங்கல்பம், புண்ணிய யாகவாஜனம், ஹோமம், கோபுர கலச பூஜை, மகா அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது அதனைத் தொடர்ந்து நடந்த அன்னதானத்தை எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com