"விஜய்யால் ஒரு பிரளயமும் நடக்கப்போவதில்லை"- அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
"விஜய்யால் ஒரு பிரளயமும் நடக்கப்போவதில்லை"- அமைச்சர் சேகர்பாபு
Published on

சென்னை,

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் அல்லது பிரசாரம் செய்தாலும் எந்தவித “பிரளயமும்” ஏற்படப்போவதில்லை என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

’கூட்டணிக் கட்சிகளை தக்கவைக்க முடியாத நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, திமுகவின் முந்தைய அறிக்கையின் நகலாகவே இருக்கிறது. பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் அல்லது பிரசாரம் செய்தாலும் எந்தவித “பிரளயமும்” ஏற்படப்போவதில்லை. வந்தார், சென்றார் என்ற அளவில்தான் இருக்கும்’ என்றார்.

Also Read
மயிலாப்பூரில் போட்டியா? - தமிழிசை சவுந்தரராஜன் பதில்
"விஜய்யால் ஒரு பிரளயமும் நடக்கப்போவதில்லை"- அமைச்சர் சேகர்பாபு

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com