ஜெ.குரு உடலால் மறைந்தாலும், நமது உள்ளங்களில் வாழ்கிறார் - அன்புமணி புகழஞ்சலி

ஜெ.குருவின் கனவை நனவாக்க கடுமையாக உழைப்போம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஜெ.குரு உடலால் மறைந்தாலும், நமது உள்ளங்களில் வாழ்கிறார் - அன்புமணி புகழஞ்சலி
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

எனது மரியாதைக்கும், அன்புக்கும் உரிய அண்ணன் மாவீரன் ஜெ.குருவின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த நாளில் நான் அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன். அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.

மாவீரன் ஜெ.குரு இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், அவர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறைந்தது முதல் இன்று வரையிலான 8 ஆண்டுகளில் அவரை நினைக்காத நாளில்லை. அந்த நினைவுகள் தான் அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

கட்சியும், சமூகமும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கனவு. அதை நோக்கித் தான் அவர் உழைத்தார். அவரது கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com