பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் 54 அரசு பள்ளிகள் உள்பட 169 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் 54 அரசு பள்ளிகள் உள்பட 169 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் 54 அரசு பள்ளிகள் உள்பட 169 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 189 பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகள் எழுதினர். இதில் செஞ்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட நெகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, வீடூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஓங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட விராட்டிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 அரசு பள்ளிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், 30 தனியார் மெட்ரிக் பள்ளிகள், 5 சுயநிதி பள்ளிகள் என 43 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளன.

10-ம் வகுப்பில் 126 பள்ளிகள்

இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் செஞ்சி கல்வி மாவட்டத்தில் மலையரசன்குப்பம், எய்யில், கள்ளப்புலியூர், கணக்கன்குப்பம், மொடையூர், தடாகம், நெகனூர், மேட்டுவைலாமூர், கோணை, நாரணமங்கலம், பென்னகர், வல்லம், தேவதானம்பேட்டை, கவரை ஆகிய அரசு பள்ளிகளும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் பேராவூர், செண்டூர், கீழ்கூத்தப்பாக்கம், கீழ்எடையாளம், கொள்ளூர், கோவடி, குன்னம், நெடி, பூத்துறை, உலகாபுரம், விட்டலாபுரம், நகர், கோட்டக்குப்பம், பேரணி, முருங்கப்பாக்கம், தேவனூர், கைப்பாணிக்குப்பம், முன்னூர், தேர்குணம், அவ்வையார்குப்பம், ஓங்கூர், காவேரிப்பாக்கம், கொந்தமூர், பொம்பூர் ஆகிய அரசு பள்ளிகளும்,

Exam resultsவிழுப்புரம் கல்வி மாவட்டத்தில் ஆசாரங்குப்பம், முத்தாம்பாளையம், பொய்யப்பாக்கம், சாணிமேடு, எசாலம், குமளம், தடுத்தாட்கொண்டூர், அரசூர், எண்ணாயிரம், வி.சாலை ஆகிய அரசு பள்ளிகளும் என 48 அரசு பள்ளிகள் மற்றும் 6 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும், 62 தனியார் மெட்ரிக் பள்ளிகளும், 9 சுயநிதி பள்ளிகளும், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியும் என 126 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளன. மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 54 அரசு பள்ளிகள் உள்பட 169 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com