சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் காயம்

புகைபிடித்தபோது வீசப்பட்ட தீப்பொறி கழிவுப் பட்டாசுகளில் பற்றியதால் வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் காயம்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பிரில்லியன்ட் பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த இந்த ஆலையின் வளாகத்திற்குள் சென்ற சிலர் புகைபிடித்தபோது, அவர்கள் வீசிய தீப்பொறி கழிவுப் பட்டாசுகளில் பற்றியதால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதி

இந்த விபத்தில் ஹரி பாரத், சுபாஷ் மற்றும் மாரிச் செல்வம் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com