திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.
ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
Published on: 

திருச்சி,

பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

படுக்கை வசதி கொண்ட பெட்டி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பின்வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, வண்டி எண்:16101 தாம்பரம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 10-ந்தேதி வரையும், வண்டி எண்:16102 கொல்லம் -தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 11-ந் தேதி வரையும், வண்டி எண்:20635 சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி வரையும் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு இயங்கும்.

அதேபோல, வண்டி எண்:20636 கொல்லம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 13-ந்தேதி வரையும், வண்டி எண்:16159 சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 7-ந்தேதி வரையும், வண்டி எண்:16160 மங்களூரு சென்ட்ரல் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 9-ந்தேதி வரையும், வண்டி எண்: 16751 சென்னை எழும்பூர் - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 8-ந்தேதி வரையும், வண்டி எண்: 16752 ராமேசுவரம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 11-ந்தேதி வரையும் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட பெட்டி ஒன்று இணைக்கப்பட்டு இயங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

X