

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடைமேடை பணிகள் நிறைவடைந்ததால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பெங்களூரு கிழக்கு ரெயில் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் நின்று செல்லும். அதன்படி, தூத்துக்குடியில் இருந்து மைசூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16235) நாளை காலை 5.29 மணிக்கும், கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு கே.எஸ்.ஆர்.பெங்களூருவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16519) காலை 6.22 மணிக்கும் பெங்களூரு கிழக்கு ரெயில் நிலையம் வரும்.
அதே போல, ஜோலார்பேட்டையில் இருந்து கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் மாலை 5.45 மணிக்கும். சென்னை சென்டிரலில் இருந்து அசோக புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16551) இரவு 7.16 மணிக்கும் பெங்களூரு கிழக்கு ரெயில் நிலையம் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.