

சென்னை,
தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாராந்திர 14 சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கும் முக்கிய ரெயில் சேவைகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு;-
தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்குச் செல்லும் சிறப்பு விரைவு ரெயில் (எண்: 06059) வரும் செப்டம்பர் 12 முதல் 26 ஆம் தேதி வரையிலும், போடிநாயக்கனூர் தாம்பரம் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் (எண்: 06060) செப்டம்பர் 13 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் கன்னியாகுமரி (வெள்ளிக்கிழமை) விரைவு ரெயில் (எண்: 06045) செப்டம்பர் 4 முதல் 25 ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி எழும்பூர் நிலையம் வரையிலான (ஞாயிற்றுக்கிழமை) விரைவு ரெயில் (எண்: 06046) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மங்களூரு சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரெயில் (எண்: 06126) வரும் செப்டம்பர் முதல் 28 ஆம் தேதி வரையிலும், சென்னை எழும்பூர் மங்களூரு இடையிலான விரைவு ரெயில் (எண்: 06125) மற்றும் போத்தனூர் சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரெயில் (எண்:06028) ஆகியவை செப்டம்பர் 8 முதல் 29 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு ரெயில் (எண்: 06030) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு ரெயில் (எண்: 06029) செப்டம்பர் 7 முதல் 28 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி தாம்பரம் விரைவு ரெயில் (எண்: 06166) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும், திருநெல்வேலி தாம்பரம் விரைவு ரெயில் (எண்: 06070) செப்டம்பர் 3 முதல் 24 ஆம் தேதி வரையிலும், தாம்பரம் திருநெல்வேலி விரைவு ரெயில் (எண்: 06069) செப்டம்பர் 4 முதல் 25 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.