4 பேருக்கு காவல் நீட்டிப்பு

4 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்து கோர்ட்டு உத்தரவிட்டது.
4 பேருக்கு காவல் நீட்டிப்பு
Published on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலரும், முன்னாள் நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது, புரோக்கர்களாக செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக சிகாமணி உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாத், ஜாமீனில் உள்ள சிகாமணி தவிர மற்ற 4 பேருக்கும் சிறைக்காவலை வரும் 18-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com