சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு - ராமதாஸ் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிக்கப்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான காலம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோரது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் விருப்ப மனுவை பெறுவதற்கான தேதி 13.1.2026 செவ்வாய்கிழமை மற்றும் 14.1.2026 புதன்கிழமை ஆகிய இருநாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com