

மதுரை,
கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
இதற்கான கடைசி தேதி நேற்றோடு முடிவடைய இருந்த நிலையில், மாணவர்களின் வசதிக்காக வரும் 30 ஆம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.