தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. அதற்கான கடைசி தேதி தற்போது வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவ-மாணவிகள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 134 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம். இம்மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் மின்னஞ்சல் முகவரி gitiperambalur@gmail.com (செல்போன் எண்கள் 9499055881, 9499055882), ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் மின்னஞ்சல் முகவரி gitialathur@gmail.com (செல்போன் எண்கள் 9499055883, 9499055884), மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மின்னஞ்சல் முகவரி dstoperambalur@gmail.com (செல்போன் எண் 9488451405), குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் மின்னஞ்சல் முகவரி gitikunnam@gmail.com (செல்போன் எண் 9047949366) ஆகிய மின்னஞ்சல் முகவரியிலும், செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com