திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சரின் திறனாய்வுத் தேர்விற்கு" விண்ணப்பிக்க விரும்பும் தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்று 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 21.06.2024 பிற்பகல் முதல் 26.06.2024 வரை பதிவேற்றம் செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இக்கால அவகாசம் 03.07.2024 வரை நீட்டிக்கப்படுகிறது. என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்து அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்கள் விண்ணப்பித்திட தலைமையாசிரியர்களுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com