பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்தது.
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

2023-24-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய பயிற்றுனர் காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாக இருந்தது.

இந்த நிலையில் மிக்ஜம் புயல் மழையின் காரணமாக இந்த பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை 7-ந்தேதியில் இருந்து 13-ந்தேதிக்கு நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அவகாசம் கேட்டும் சிலர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டு இருப்பதாகவும் தேர்வு வாரியம் அறிவித்து இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com