மின் கட்டணம் செலுத்த ஜூன் 6ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு

வீடுகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த ஜூன் 6ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நேற்று நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக வேலை, வருவாய் இல்லாத சூழலில் பலர் உள்ளனர்.

இதனால், தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் விவசாய கடன் ஆகியவற்றை செலுத்துவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனை குறிப்பிட்டு, மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலைக்கு தள்ளி வைக்க வேண்டும் என கேரி சென்னை ஐகோர்ட்டில் பெதுநல வழக்கு தெடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோர்ட்டில் கூறும்பொழுது, மின் கட்டணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் ஜூன் 6ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதை பதிவுசெய்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 8ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com