திமுக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

திமுக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திமுக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக்களைப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் அன்பரசன். இவர் தனது முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராகக் கருத்து பதிவு ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து பகுதியில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com