ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையில் தீ விபத்து - தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையில் தீ விபத்து - தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் விநாயகாநகரில் குடியிருப்பு பகுதியில் மாதவரத்தை சேர்ந்த கெவின் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் அரைக்கும் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் நேற்று காலை திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்தனர். .இந்த நிலையில் திடீரென தீ மளமளவென பிடித்து கரும்புகையுடன் எரிய தொடங்கியது.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகே இருந்த வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.

மேலும் இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com