போட்டியில் தோல்வி: மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் - அதிர்ச்சி வீடியோ

உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போட்டியில் தோல்வி: மாணவர்களை ஷூ கால்களால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் - அதிர்ச்சி வீடியோ
Published on

மேட்டூர்,

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com